search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புக்கு மே மாதத்தில் நீட் தேர்வு
    X

    எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புக்கு மே மாதத்தில் நீட் தேர்வு

    எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. #NEET
    சென்னை:

    நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு இடங்களும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.டி.எஸ். பட்டப்படிப்பு இடங்களும் உள்ளன.

    மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தற்போது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் ‘நீட்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.

    அது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரத்தில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெற சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

    அது குறித்து சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் கூறும் போது, “நீட்தேர்வு தொடர்பான அறிவிப்பை www.cbseneet.nic.in, www.cbse.nic.in என்ற இணையதளத்தில் ஓரிரு வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.

    கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடிசியா, அசாம், வங்காளம் ஆகிய 10 தொழிகளில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். தேவைப்பட்டால் இன்னும் கூடுதல் மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.

    கடந்த ஆண்டு தேர்வின் போது ஒவ்வொரு மொழியிலும் வினாத்தாள் மாறி இருந்ததாக புகார்கள் எழுந்தது. இந்த ஆண்டு அது போன்ற தவறுகள் நடக்காது. அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரி வினாத்தாள் வெளியிடப்படும்.

    அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தேர்வு எழுத வந்த மாணவ- மாணவிகளிடம் சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தேர்வில் மாணவர்களின் முறைகேடுகளை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டும் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு கண்டிப்பாக இருக்கும்.

    தங்க நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. கடும் சோதனைக்கு பின்னரே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தனர். #TamilNews #NEET
    Next Story
    ×