search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நுங்கம்பாக்கத்தில் ஐ.டி.ஐ. மாணவர் படுகொலை
    X

    நுங்கம்பாக்கத்தில் ஐ.டி.ஐ. மாணவர் படுகொலை

    நுங்கம்பாக்கத்தில் ஐ.டி.ஐ. மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் அப்பு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ரஞ்சித் (19). கிண்டியில் ஐ.டி.ஐ. படித்து வந்த இவர் நேற்று இரவு 7.30 மணி அளவில் வெளியில் சென்றார்.

    நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரஞ்சித் பின்னர் இரவு 11.30 மணி அளவில் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக போனில் தெரிவித்துள்ளார். ஆனால் வீட்டுக்கு வந்து சேரவில்லை.

    இதனை தொடர்ந்து ரஞ்சித்தின் குடும்பத்தினரும் நண்பர்களும் தேடி அலைந்தனர். அப்போது வீட்டில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் குளக்கரை தெருவில் ரஞ்சித் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் பெரிய வெட்டுக்காயம் இருந்தது. அது கத்தியால் குத்தப்பட்டதா? அல்லது பாட்டிலால் குத்தப்பட்டதா? என்பது தெரியவில்லை.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் நுங்கம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட ரஞ்சித் இதற்கு முன்னர் கூடுவாஞ்சேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக அவருக்கும் இன்னொரு வாலிபருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த வாலிபர் ரஞ்சித்தை செல்போனில் தொடர்பு கொண்டும் மிரட்டி உள்ளார். அந்த வாலிபர்தான் ரஞ்சித்தை பின் தொடர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இக்கொலை சம்பவம் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவர் ரஞ்சித்தை கொலையாளிகள் நேற்று இரவு முழுவதும் பின் தொடர்ந்து சென்று சரியான நேரம் பார்த்து தீர்த்துக்கட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

    ரஞ்சித் நேற்று இரவு பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மீஞ்சூர் சென்றுள்ளார். சென்ட்ரலில் இருந்து மின்சார ரெயிலில் மீஞ்சூருக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் மின்சார ரெயிலிலேயே வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

    ரஞ்சித்தின் வருகைக்காக தந்தை ரமேஷ், தாய் சரஸ்வதி, அக்காள் பவித்ரா ஆகியோர் வீட்டில் காத்திருந்தனர். கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவில் வீட்டுக்கு போன் செய்த ரஞ்சித் ரெயில் வந்துவிட்டது. சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவேன் என்று கூறி உள்ளார். அதன் பின்னர் ரஞ்சித்திடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. வீட்டுக்கும் அவர் செல்லவில்லை. இதனால் குடும்பத்தினர் பீதியில் தவித்தனர். ரஞ்சித் என்ன ஆனானோ? என்கிற கவலையில் இருந்தனர்.

    இந்த நிலையில்தான் நுங்கம்பாக்கத்தில் உள்ள ரஞ்சித்தின் வீட்டுக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    ரஞ்சித்தை தீர்த்துக் கட்டிய கொலையாளிகள் நுங்கம்பாக்கத்தில் வீட்டில் இருந்து அவர் புறப்பட்ட நேரத்தில் இருந்தே தீர்த்துக் கட்ட திட்டம் போட்டுள்ளனர். அவர் புறப்பட்டு சென்ற போது ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் ஒதுங்கி கொண்டனர். பின்னர், ரெயிலில் அவர் எங்கே செல்கிறார்? என்பதை பின் தொடர்ந்து நள்ளிரவு வரையில் காத்திருந்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

    ரஞ்சித் கொலை செய்யப்பட்டது பற்றி நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரது தாய் மற்றும் சகோதரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கதறி அழுதனர். #tamilnews

    Next Story
    ×