search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலைகளை சீரமைக்க கோரி புதுவையில் விடிய விடிய போராட்டம் நடத்திய என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.
    X

    சாலைகளை சீரமைக்க கோரி புதுவையில் விடிய விடிய போராட்டம் நடத்திய என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.

    சாலைகளை சீரமைக்க கோரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பெய்த பருவ மழையினால் சாலைகளில் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள் ஏற்பட்டது.

    நகரின் பிரதான சாலைகள், புறநகர் சாலைகள், கிராமப்புற சாலைகள் என பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து பாதிப்புக்குள்ளானது. சேதமடைந்த சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும் போது புழுதி புயலே ஏற்பட்டது.

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து விடாமல் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வாகனங்களுக்குள் மோதல் ஏற்பட்டு விபத்து நடந்தது. போக்குவரத்து நெரிசலால் பலர் பள்ளத்தை தவிர்க்க முடியாமல் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இதனால் சாலைகளை சீரமைக்க கோரி எம்.எல். ஏ.க்கள் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால், நிதி நெருக்கடியால் சாலைகள் சீரமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் மொபட்டில் சென்ற கல்லூரி மாணவி சுபத்ரா சாலை பள்ளத்தி நிலைதடுமாறி விழுந்தார். அப்போது பின் புறம் வந்த மோட்டார் சைக் கிள் அவர் மீது ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்தார்.

    படுகாயம் அடைந்த மாணவி சுபத்ரா ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இது குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவி சுபத்ரா மரணம் அடைந்த சம்பவம் குறித்து அறிந்த தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு பிற்பகல் 1.30 மணியளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டிசம்பர் மாதம் 8-ந் தேதியே சாலைகளை சீரமைக்க பொதுப்பணித் துறை தலைமை என்ஜினீயருக்கு கடிதம் அளித்ததாக வும் உடனடியாக சாலையை சீரமைத்திருந்தால் மாணவி மரணத்தை தடுத்திருக்கலாம் எனக் கூறி போராட்டத்தை தொடங்கினார்.

    மேலும், சாலைகளை சீரமைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்றும் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ. அறிவித்தார். அவரிடம் பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால், சாலை சீரமைக்கப்படும் வரை போராட் டத்தை கைவிட அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ. மறுத்து விட்டார். இதனையடுத்து பொதுப்பணித்துறை மூலம் தட்டாஞ்சாவடி தொகு திக்கு உட்பட்ட சாலை கள் சீரமைக்கும் பணி தொடங் கியது.

    கிழக்கு கடற்கரை சாலை பாக்குமுடையான் பட்டு சந்திப்பு முதல் நடுத்தெரு பிள்ளையார் கோவில் வரையில் மழையால் ஏற்பட்டிருந்த 15 பெரும் பள்ளங்கள் மூடப்பட்டது. ஆங்காங்கே சேத மடைந்த பகுதிகளிலும் மண் கொட்டப்பட்டு சீரமைக் கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பணிகள் நடந்து வருகிறது.

    வழுதாவூர் சாலையை சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. வருகிற திங்கட் கிழமை பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இரவு முழுவதும் விடிய விடிய பொதுப் பணித்துறை என்ஜினீயர்களும், ஊழியர்களும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே போராட் டத்தை கைவிட மறுத்த அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., பொதுப் பணித்துறை அலுவலகத்திலேயே தனது ஆதரவாளர்களுடன் படுத்து தூங்கினார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இருந்தனர்.

    விடிய விடிய அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ.வின் போராட்டம் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலையிலும் அவர் போராட்டத்தை தொடர்ந்தார். இது குறித்து அசோக் ஆனந்த் எம்.எல். ஏ.விடம் கேட்ட போது, ‘கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகே போராட்டத்தை கைவிடுவேன்’ என்று கூறினார்.

    எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் சாலை பணிகள் நடைபெறுவதை கண்காணித்து அவ்வப்போது செல்போன் மூலம் தகவல் அளித்தும் வருகின்றனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வான அசோக் ஆனந்த்தின் தொட ரும் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×