search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி 2 இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்து  போராட்டம்
    X

    பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி 2 இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்து  போராட்டம்

    சிவகாசி அருகே பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி 2 இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்து  போராட்டம் இன்று நடந்தது.

    சிவகாசி:

    சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி தடை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது.

    இன்று 24-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக பட்டாசு மற்றும் அதன் உபதொழிலை நம்பியிருக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

    பட்டாசு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் போன்றவை நடந்து வருகிறது. ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி, திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் அருகே உள்ள விஸ்வநத்தத்தில் கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டம் இன்று நடந்தது. தொழிலாளர்கள் சார்பில் கஞ்சி தயார் செய்து வழங்கப்பட்டது. அப்போது தொழிலாளர்கள் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி திருத்தங்கலில் நாளை சி.ஐ.டி.யு. சார்பில் ரெயில் மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×