search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுப்பன்றிகளால் சேதமான சேம்பு பயிர்கள்
    X
    காட்டுப்பன்றிகளால் சேதமான சேம்பு பயிர்கள்

    ஆலங்குளம் அருகே சேம்பு பயிர்களை சேதப்படுத்தி காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

    ஆலங்குளம் அருகே சேம்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தி விடுவதை அடுத்து பொதுமக்கள் மின்வேலி அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே ஒக்கனின்றான் மலை அடிவார பகுதியில் கல்லூத்து ஊருக்கு கீழ்புறம் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களில் பால் சேம்பு பயிர்செய்துள்ளனர். இந்த சேம்பு கிழங்கு திரளும்பருவத்தில் உள்ளது. இந்த வேளையில் மலையில் இருந்து தோட்டத்துக்குள் வரும் காட்டுப்பன்றிகள் இந்த பால்சேம்பு பயிர்களில் கிழங்குகளை தின்று விடுகின்றன.

    இதனால் திரட்சியான பருவத்தில் சேம்பு பயிர்கள் அழிந்து சேதமாகிவிடுகின்றன. ஆலங்குளம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணப்பேரியை சேர்ந்த விவசாயி முருகன் மற்றும் சேர்மக்கனி ஆகியோர் தங்கள் நிலங்களில் பயிரிட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பால்சேம்பு பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். இந்த பயிர்கள் மகசூல் எடுக்க தயார் நிலையில் இருந்தது. இந்த சூழ்நிலையில் காட்டுப்பன்றிகள் இவற்றை அழித்து சேதப்படுத்தி விட்டதால் மகசூல் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    பொதுவாகவே காட்டுப்பகுதியில் தண்ணீர் இல்லாததால்தான் வனவிலங்குகள் இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வருகின்றன. வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். மேலும் வனவிலங்குகள் ஊடுறுவாத வகையில் மின்வேலிகள் அமைக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுபற்றி விவசாயி முருகன் கூறுகையில், ஆலங்குளம் மலையில் ஏராளமான மான்கள், மிளாக்கள், காட்டுப்பன்றிகள் உள்ளன. இவை அடிக்கடி தண்ணீருக்காக சுற்ருப்பகுதியில் உள்ல தோட்டங்களுக்கு வருகின்றன. அப்போது தோட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்களை அவை நாசப்படுத்தி விடுகின்றன. எனவே வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடையாமல் பாதுக்காக்க மின்வேலி அமைக்கவேண்டும். மேலும் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும்“ என்றார். #tamilnews
    Next Story
    ×