search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் அருகே கூல மேட்டில் நாளை ஜல்லிக்கட்டு: கலெக்டர் ரோகிணி இன்று ஆய்வு செய்கிறார்
    X

    ஆத்தூர் அருகே கூல மேட்டில் நாளை ஜல்லிக்கட்டு: கலெக்டர் ரோகிணி இன்று ஆய்வு செய்கிறார்

    ஆத்தூர் அருகே கூல மேட்டில் நாளை ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை மாவட்ட கலெக்டர் ரோகினி இன்று ஆய்வு செய்கிறார்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு கிராமத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு பிரமாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் நாளை (17-ந் தேதி) காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க திருச்சி, அரியலூர், வேலூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 650 காளைகளின் உரிமையாளர்கள் முன் பதிவு செய்துள்ளனர்.

    இதே போல காளைகளை அடக்க ஆத்தூர், தம்மம்பட்டி, வீரகனூர் பகுதியை சேர்ந்த 450 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஜல்லிக்கட்டை பார்க்க ஏராளமானோர் வருவார்கள் என்பதால் அவர்கள் பார்வையிட வசதியாக தடுப்பு கட்டைகள் மற்றும் வாடி வாசலும் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழு, கால்நடை மருத்துவ குழு தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காயம் அடையும் மாடுபிடி வீரர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் தயாராக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று வருவாய் துறை அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

    மாவட்ட கலெக்டர் ரோகிணி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் இன்று கூல மேட்டில் ஜல்லிக்கட்டு மைதானம், வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் பகுதிகளை ஆய்வு செய்கிறார்கள். #tamilnews
    Next Story
    ×