search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிராக சாட்சியம் அளிப்போர் பட்டியல் வேண்டும்: விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு மனு தாக்கல்
    X

    எதிராக சாட்சியம் அளிப்போர் பட்டியல் வேண்டும்: விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு மனு தாக்கல்

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையின்போது, சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போர் குறித்த பட்டியல் கேட்டு விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. #Jayadeathprobe
    சென்னை:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. 

    ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எழுப்பியவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், உறவினர்கள் என பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு விளக்கங்கள் பெறப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 

    அவர் சிறையில் இருப்பதால் அவர் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது, சசிகலா தரப்பில் அவர் ஒரு மனு தாக்கல் செய்தார். 

    அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போர் குறித்த பட்டியலை விசாரணை ஆணையம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மனு மீது 22-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    விசாரணை ஆணையம் அந்த பட்டியலை வழங்கிய 15 நாளில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். #Jayadeathprobe #tamilnews
    Next Story
    ×