search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்காலிக கண்டக்டராக நடித்து அரசுப் பேருந்தில் டிக்கெட் கட்டணம் வசூல்: பலே ஆசாமி சிக்கினார்
    X

    தற்காலிக கண்டக்டராக நடித்து அரசுப் பேருந்தில் டிக்கெட் கட்டணம் வசூல்: பலே ஆசாமி சிக்கினார்

    திருவாரூரில் அரசுப் பேருந்தில் தற்காலிக கண்டக்டராக நடித்து பணம் வசூலித்த 2 நபர்களில் ஒருவர் சிக்கியுள்ளார்.
    திருவாரூர்:

    ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து முடங்கியது.

    இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் ஓரளவு போக்குவரத்து பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர் ஆகிய 4 பணிமனைகளில் இருந்து மொத்தம் 239 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இதில்  தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வதற்காக திருவாரூர் பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அனைத்து அரசு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் நாகை செல்லும் அரசுப் பேருந்தில் தற்காலிக கண்டக்டராக 2 பேர் பணம் வசூல் செய்துள்ளனர். ஆண்டிப்பாளையம் பகுதியில் டிக்கெட் பரிசோதகரை கண்டவுடன் போலி கண்டக்டர்கள் பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவரைப் பிடித்து டிக்கெட் பரிசோதகர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
    Next Story
    ×