search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் மோதி பலி: சிறுமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
    X

    பஸ் மோதி பலி: சிறுமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    திருப்பத்தூர் அருகே பஸ் மோதி சிறுமி இறந்ததால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார்.

    இவருடைய மகள்கள் அபிநயா (வயது 8), ஜோதிஸ்ரீ (6). அபிநயா திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் சவுந்தரபாண்டியனின் மகள்கள் அபிநயா, ஜோதிஸ்ரீ மற்றும் சவுந்தரபாண்டியனின் தம்பி இளையராஜா ஆகிய 3 பேரும் அண்ணாநகரில் ரோட்டை கடந்துள்ளனர்.

    அப்போது திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயத்திற்கு சென்ற தனியார் பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் அபிநயா சம்பவ இடத்திலேயே பலியானாள். ஜோதிஸ்ரீ மற்றும் இளையராஜா ஆகிய இவரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சவுந்தரபாண்டியனின் உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் ஆத்திரமடைந்து விபத்துக்கு காரணமான தனியார் பஸ்சின் கண்ணாடியை உடைத்து, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் விபத்தில் பலியான அபிநயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜாவின் வலது காலை டாக்டர்கள் வெட்டி எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு அபிநயாவின் உடலை வாங்க மறுத்து இளையராஜாவிற்கு நஷ்டஈடும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கூறி போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், இன்ஸ் பெக்டர்கள் பழனி, உலக நாதன், ஸ்ரீதர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. #tamilnews

    Next Story
    ×