search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை கடற்படை அட்டூழியம் - மீன்பிடிக்க சென்ற 4000 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
    X

    இலங்கை கடற்படை அட்டூழியம் - மீன்பிடிக்க சென்ற 4000 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

    கச்சத்தீவு அருகில் கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை விரட்டி அடித்ததுடன், அவர்களது படகுகளையும், மீன்பிடி வலைகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்து வைத்துள்ளனர்.#TNfishermenisue #Srilankannavy
    ராமேஸ்வரம்:
     
    ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து கச்சத்தீவு பகுதி அருகில் மீன்பிடிக்க 800-க்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் நேற்று சென்றனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்து திரும்பி செல்லும்படி மீனவர்களை விரட்டி அடித்தனர். அத்துடன், மீன்பிடிப்பதற்காக கொண்டு சென்ற மீன்பிடி வலைகளை பறித்துக் கொண்டனர். மேலும், 100க்கு மேற்பட்ட மீன்பிடி படகுகளையும் பிடித்து வைத்துக் கொண்டனர்.

    இதையடுத்து, மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டோம். தொடர்ந்து தமிழக மீனவர்களளிடம் இலங்கை கடற்படையினர் அத்துமீறி நடந்து வருவதற்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காணவேண்டும் என மீனவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
     
    கடந்த 4-ம் தேதி தங்கச்சிமடம் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. #TNfishermenisue #Srilankannavy #tamilnews
    Next Story
    ×