search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆய்வின்போது கிரண்பேடியை எதிர்த்தவர்களே இப்போது அவரை அழைக்கிறார்கள்: கவர்னர் மாளிகை தகவல்
    X

    ஆய்வின்போது கிரண்பேடியை எதிர்த்தவர்களே இப்போது அவரை அழைக்கிறார்கள்: கவர்னர் மாளிகை தகவல்

    ஆய்வுக்கு சென்ற இடங்களில் கிரண்பேடியை எதிர்த்தவர்கள் இப்போது தங்கள் பகுதிக்கு அவர் வரவேண்டும் என்று அழைப்பதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    கவர்னர் மாளிகையில் இருந்து இன்று இணைய தளம் மூலம் செய்தி குறிப்பி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    புதுவை கவர்னர் மாளிகையில் குறை தீர்வுக்காக இதுவரை 13 ஆயிரத்து 75 புகார்கள் வந்துள்ளன. நேரடியாக 5 ஆயிரத்து 752 மனுக்களும் இமெயில், இணையதளம் மூலமாக 5,692 மனுக்களும், வாட்ஸ்-அப் மூலமாக 1632 மனுக்களும் மேலும் பத்திரிகைகள் வாயிலாக நூற்றுக்கணக்கான புகார்களும் வந்துள்ளன.

    அதிகபட்சமாக சுகாதாரம், சாக்கடை பிரச்சினை, பொதுமக்களுக்கு தொல்லை, தெரு விளக்கு இல்லாமை, ஆக்கிரமிப்பு, நாய் தொல்லை, சாலை பாதிப்பு போன்ற பொது பிரச்சினைகளை முன் வைத்து 2492 மனுக்கள் வந்துள்ளன.

    அதேபோல் அரசு பணிகளில் பணி நியமனம், பணிமாற்றம், பதவி உயர்வு, பென்‌ஷன் திட்டம், காலதாமதங்கள், பணி நிரந்தரம், காலி இடங்கள், விதிமுறைகளை மீறி நியமனம் போன்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அதிக மனுக்கள் வந்துள்ளன. மேலும் கல்வித்துறை தொடர்பாகவும் ஏராளமான புகார்கள் வந்திருக்கிறது.

    அரசு துறைகளில் நடக்கும் ஊழல்கள் போன்றவை பற்றியும் பலர் புகார் தெரிவித்துள்ளனர். போலீஸ் துறை சம்பந்தமான புகார்களும் அதிகமாக வந்துள்ளது. ரவுடிகள் தொல்லை, மிரட்டல், நில ஆக்கிரமிப்பு, மோசடி, மது கடைகளால் தொல்லை, சாலை பாதுகாப்பு பிரச்சினை, குடும்ப பிரச்சினை போன்றவை பற்றியும் புகார் கொடுத்துள்ளனர்.

    இதுபோன்று வரும் அனைத்து புகார்களுக்கும் தீர்வு காண கவர்னர் மாளிகை குறை தீர்வு குழு கவர்னரின் செயலாளர், தலைமை குறை தீர்வு அதிகாரி, மக்கள் தொடர்பு அதிகாரி, குடும்ப ஆலோசகர், சட்ட உதவியாளர் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதற்கு தீர்வு கண்டு வருகிறார்கள்.

    மேலும் தினமும் மாலை 5 மணியில் இருந்து 7 மணி வரை பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார் பெறப்படுகிறது. ஏழைகள், பெண்கள், குழந்தைகள் என பலரும் புகார் அளிக்கிறார்கள். அவர்களை வரவேற்று குறைகள் கேட்டு அறியப்படுகிறது.

    எல்லா பிரச்சினைகளுக்கும் உரிய அதிகாரிகளிடம் வி‌ஷயங்களை கொண்டு சென்று தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும் கவர்னர் மாளிகை குழு அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறது. இதனால் ஊழலும், விதிமுறை மீறலும் தடுக்கப்படுகிறது.

    கவர்னர் மாளிகை வெறும் தபால் நிலையம் போல் அல்லாமல் அங்கு வரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் ஆதாரத்துடன் தரும் தகவல்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது வரை 122 வாரங்கள் கவர்னர் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். சில இடங்களில் உள்ளூர் தலைவர்கள் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், ஆய்வை நிறுத்தாமல் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக அப்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களே இன்று கவர்னர் மாளிகை குழு தங்கள் பகுதிக்கு வர வேண்டும் என்று அழைக்கிறார்கள். இந்த குழு தொடர்ந்து தீவிரமாக செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×