search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று 30-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை
    X

    இன்று 30-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை

    30-வது எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி புதுவை பஸ் நிறுத்தம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 30-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி புதுவை பஸ் நிறுத்தம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, புதுவை அரசின் டெல்லி பிரதிநிதி ஜான்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் புருசோத்தமன் தலைமையில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் தலைமையில் உப்பளம் கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் மவுன ஊர்வலமாக புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை செயலாளர்கள் கணேசன், பன்னீர் செல்வி, நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், அணி செயலாளர்கள் நாகமணி, பாப்புசாமி, சுப்பிரமணியன், அந்துவான், தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், சக்கரவர்த்தி, சிவக்குமார், பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ஒம்சக்தி சேகர் தலைமையில் லெனின் வீதியில் இருந்து மவுன ஊர்வலமாக வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ், முன்னாள் அமைச்சர் காசிலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, துணை செயலாளர் கோவிந்தம்மாள், முன்னாள் இன்ஸ்பெக்டர், செல்வராஜ், மகளிரணி விஜயலட்சுமி, செயற்குழு உறுப்பினர் இந்திரா, முனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    திரனகரன் அணி சார்பில் சுத்துக்கேணி பாஸ்கர் மற்றும் வக்கீல் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மூர்த்தி, பாண்டுரங்கன், சேகர், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    புதிய நீதிக்கட்சி சார்பில் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமை யில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, தேவநாதன், வேள்பாரி நடராஜன், சண்முகம், கோவிந்தராஜ், ராஜேந்திரன், சிவா, மோகன், அருண், மோகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    காக்காயந்தோப்பில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மாசிலா குப்புசாமி தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தொகுதி அவைத்தலைவர் நடராஜன், முன்னாள் தொகுதி அவைத்தலைவர் குமரன், வார்டு தலைவர் சரவணன், காக்காயந்தோப்பு நிர்வாகிகள் ஜானகிராமன், ஆறுமுகம், வெங்கடசாமி, சகாயராஜ், கதிர்வேல், ராமலிங்கம், காண்டியன், குணாளன், சாம்பசிவம், சுப்புராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×