search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் குளிர் காய்ந்த என்ஜினீயரிங் கல்லூரி காவலாளி பலி
    X

    ஊட்டியில் குளிர் காய்ந்த என்ஜினீயரிங் கல்லூரி காவலாளி பலி

    ஊட்டியில் பனிப்பொழிவு வாட்டி வதைப்பதால் தீ மூட்டி குளிர் காய்ந்த என்ஜினீயரிங் கல்லூரி காவலாளி மயக்க மடைந்து இறந்தார்.

    காந்தல்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு வாட்டி வதைக்கிறது. நீர்ப்பனி காரணமாக தேயிலைச்செடிகள் மற்றும் மலர்ச்செடிகள் பிளாஸ்டிக் போர்வையால் போர்த்தியுள்ளனர். மலைக்காய்கறிகளுக்கு குளிரின் தாக்கதை கட்டுப்படுத்த தண்ணீர் தெளித்து வருகிறார்கள்.

    கடுங்குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே தகரத்தில் அடுப்புக்கரியை போட்டு தீ மூட்டி விடுவார்கள். இதனால் அறை கதகதப்பாக இருக்கும். போதிய வெப்பம் கிடைக்காமல் போனால் டீ தூளில் கலக்கப்படும் சிக்கரியை தீயில் போடுவார்கள்.

    இதனால் வெப்பம் நீண்ட நேரத்திற்கு அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஊட்டி கேத்தியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் காவலாளிகள் கிருஷ்ணன் (வயது 56), காட்டேரியை சேர்ந்த சண்முகம் (46) ஆகியோர் இரவு பணியில் ஈடுபட்டனர். நேற்றும் கடுங்குளிர் நிலவியதால் காவலாளிகள் தங்கள் அறையில் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

    இன்று காலை வெகுநேரமாகியும் காவலாளிகளின் நடமாட்டம் இல்லாததை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் காவலாளி அறையை எட்டிப்பார்த்தனர்.

    அப்போது கிருஷ்ணனும், சண்முகமும் படுத்து கிடந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது சண்முகம் இறந்து கிடந்தார். கிருஷ்ணன் மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணனை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குளிரில் இருந்து தப்பிக்க நெருப்பு மூட்டி குளிர்காய்வது தவறில்லை. மூடப்பட்ட அறையில் தீ மூட்டி குளிர்காயும்போது கார்பன்டை ஆக்சைடு அதிகமாகி மயக்கத்தை ஏற்படுத்தும்.

    நெருப்பு எரிய ஆக்ஜிசன் அதிகம் தேவைப்படும். இதனால் பிராணவாயு அதிகம் எரிந்து கார்பன்டை ஆக்சைடு அறைறை சூழ்ந்து விடுகிறது. இதனால் மயக்கம் மற்றும் இறப்பு நேரிடுகிறது என்று டாக்டர் ஒருவர் கூறினார்.

    Next Story
    ×