search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் புத்தாண்டுக்கு 1,500 போலீசார் பாதுகாப்பு
    X

    கோவையில் புத்தாண்டுக்கு 1,500 போலீசார் பாதுகாப்பு

    கோவையில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 22 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும்.
    கோவை:

    வருகிற 1-ந் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த புத்தாண்டு விபத்தில்லா புத்தாண்டாக அமைய போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன் ஓட்டல் உரிமையாளர்களை அழைத்து போலீசார் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.

    மேலும் புத்தாண்டையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து சட்டம்-ஒழுங்கு துணை கமி‌ஷனர் லட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது-

    புத்தாண்டையொட்டி 31-ந் தேதி மாலை முதலே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட உள்ளார்கள். குடி போதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக ஓட்டுதல் ஆகியவை கண்காணிக்கப்படும்.

    இதற்காக 22 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும். புத்தாண்டு நிகழ்ச்சி நடக்கும் ஒட்டல்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் படி ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    பெண்கள் பங்கேற்கும் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஒட்டல் உரிமையாளர்களை கேட்டு கொண்டுள்ளோம்.

    புத்தாண்டு கொண்டாடி விட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டி செல்ல ஓட்டல் நிர்வாகம் அனுமதிக்க கூடாது. போதையில் இல்லாத நபரை ஓட்டி செல்லுமாறு பார்த்து கொள்ள வேண்டும்

    நட்சத்திர விடுதிகளில் நீச்சல் குளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மேடை அமைக்க கூடாது. மின்சாரம் செல்லும் பாதையில் அமைக்காமல் பாதுகாப்பான இடங்களில் அமைக்க வேண்டும்.

    புத்தாண்டு பாதுகாப்பு பணியில் சட்டம்-ஒழுங்கு போலீசாருடன் குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீசார், ஊர்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டின் போது 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதே போல் கோவை புறநகர் பகுதியிலும் புத்தாண்டு கொண்டாட் டத்தின் போது பலத்த பாதுகாப்பு போடப்படு கிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின் பேரில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
    Next Story
    ×