search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயல் பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ.325 கோடி நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு
    X

    ஒக்கி புயல் பாதிப்புக்கு முதற்கட்டமாக ரூ.325 கோடி நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு முதற்கட்டமாக ரூ.325 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்கும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளம் மற்றும் லட்சத்தீவுகளில் பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மீனவ மற்றும்  விவசாய பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது மாநில அரசுகள் சார்பில் பிரதமரிடம், நிவாரண நிதி தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.



    கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மீனவ மற்றும் விவசாய பிரதிநிதிகளை மோடி சந்தித்து பேசியபோது, புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்தனர். புயலால் சேதம் அடைந்த பயிர்கள் மற்றும் படகுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும், புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இந்த ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு பிரதமர் மோடி, முதற்கட்ட நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரண நிதி வழங்கி ஆதரவு அளிக்கும். புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு முதற்கட்டமாக 325 கோடி ரூபாய் நிவாரண நிதி உடனடியாக வழங்கப்படும். புயலால் முழுமையாக சேதமடைந்த 1400 வீடுகள் புதிதாக கட்டி தரப்படும்’ என்று அறிவித்துள்ளார்.
    Next Story
    ×