search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரு மாநிலங்களில் வெற்றி: பா.ஜ.க.வின் சாதனைக்கு கிடைத்த வெற்றி அல்ல - முத்தரசன்
    X

    இரு மாநிலங்களில் வெற்றி: பா.ஜ.க.வின் சாதனைக்கு கிடைத்த வெற்றி அல்ல - முத்தரசன்

    குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பெற்ற வெற்றியை சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல முடியாது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவு குறித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

    குஜராத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. இமாச்சலபிர தேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    குஜராத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றது. உண்மையாக இருந்தாலும் நினைத்தது போல் இமாலய சாதனை படைக்க முடியவில்லை.

    தேர்தல் ஆணையம் பா.ஜனதாவுக்கு சாதகமாகவே செயல்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்பதிலேயே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது எல்லோருக்கும் தெரியும்.

    குஜராத் தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றி பெற வேண்டும் என்று மோடி கவுரவ பிரச்சினையாக கையில் எடுத்து பிரசாரம் செய்தார்.

    பிரதமர் என்ற நிலையில் இருந்து நழுவி தேவையற்ற கருத்துக்களை கூறினார். 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த கண்ணியத்துக்குரிய மன்மோகன் சிங் பாகிஸ்தானுடன் சேர்ந்து அவருக்கு எதிராக சதி திட்டம் தீட்டினார் என்று பிரசாரம் செய்தது கண்டனத்துக்குரியது.

    வாக்குப்பதிவு நாளில் பா.ஜனதா தேர்தல் விதியை மீறி ஊர்வலம் நடத்தியது. அதற்கு நோட்டீஸ் அனுப்ப 3 தேர்தல் அதிகாரிகளில் ஒருவர் ஒத்துக்கொள்கிறார். மற்றொருவர் எதிர்க்கிறார். இன்னொருவர் மவுனம் சாதிக்கிறார். இதில் இருந்தே தேர்தல் ஆணையம் என்ன நிலையில் இருக்கிறது என்பது புரியும்.

    குறிப்பிட்ட எண்ணிக்கையை கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதை வைத்து இதை சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல முடியாது. பெற்ற தொகுதிகளை விட பெற்ற வாக்குகள் எவ்வளவு என்பதை பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×