search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
    X

    ராமநாதபுரம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

    ராமநாதபுரம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வைகை தண்ணீர் திறக்கப்பட்டும் இந்த கிராமத்திற்கு குடிநீர் கிடைக்கவில்லை.

    பெரிய கண்மாயில் இருந்து புல்லங்குடி வழியாக கடலில் கலக்கும் உபரி நீரை தங்கள் கிராமத்திற்கு வழங்ககோரி ஆர். காவனூர் மக்கள் வலியுறுத்தினர். மேலும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நயினார் கோவில் சாலையில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கிராம தலைவர் மலைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    மறியல் குறித்து தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் தாசில்தார் சண்முக சுந்தரம், பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் மக்கள் மறியலை கைவிட மறுத்ததால் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் சூரங்கோட்டை சங்குமுத்து மாரிநகரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாக மூடப்படாமல் இருந்தது. இதனால் அந்த பகுதியை கடக்க பொதுமக்கள் மரப்பாலம் அமைத்தனர்.

    அந்தப்பாலமும் தற்போது சேதமடைந்து விட்டதால் பள்ளத்தை சீரமைக்க கோரி இன்று காலை நயினார் கோவில் சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. கோட்டாட்சியர் பேபி, தாசில்தார் சண்முக சுந்தரம் மற்றும் வருவாய்துறையினர் விரைந்து சென்று மக்களை சமரசம் செய்தனர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    Next Story
    ×