search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
    X

    வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

    வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கள்ளிமேடு ஊராட்சியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த ஊராட்சியின் வடக்கு பகுதியான பழங்கள்ளி மேட்டில் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் மூன்று நாட்களுக்கு ஓரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. நேற்று குடிநீர் வராததால் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தலைஞாயிறு ஒன்றிய ஆணையர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி முறையாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராஜலெட்சுமி கூறியதாவது:- நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. அதனை பிடித்து வைத்துவிட்டு நாங்கள் வேலைக்கு சென்று வந்து பார்க்கும்போது டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு வருபவர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் நாங்கள் தண்ணீர் பிடிக்க சென்றுவர அரை நாள் ஆகிறது. இதனால் நாங்கள் வேலைக்கு செல்ல முடியாமலும் தண்ணீர் கிடைக்காமலும் மிகுந்த சிரமப்படுகிறோம். எனவே தினந்தோறும் எங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×