search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியாயவிலைக்கடை பணியாளர்களை போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: ராமதாஸ்
    X

    நியாயவிலைக்கடை பணியாளர்களை போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்: ராமதாஸ்

    நியாயவிலைக்கடை பணியாளர்களை போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 2976 பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டிருக்கிறது. சுமார் 3 ஆயிரம் பேருக்கு பொதுத்துறை நிறுவன வேலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் போதிலும் அதற்கான ஆள்தேர்வு நியாயமாக நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    வழக்கமாக நியாயவிலைக்கடை பணியாளர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த முறையில் தான் முறைகேடுகளை தவிர்க்க முடியும். 12-ம் வகுப்புத் தகுதி கொண்ட விற்பனையாளர் பணிக்கும், 10-ம்வகுப்பு தகுதி கொண்ட கட்டுனர் பணிக்கும் போட்டித்தேர்வு நடத்தாமல் நேர்காணல் நடத்துவது முறையல்ல. அதிலும் மாவட்ட அளவில் நேர்காணல் நடத்துவதால் மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது.



    எனவே, நியாயவிலைக்கடை பணியாளர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைக் கைவிட்டு, போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுத்து நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும் விற்பனையாளர்களுக்கு 12-ம் வகுப்புத் தகுதி கொண்ட அரசு ஊழியர்களுக்கு இணையாகவும், கட்டுனர்களுக்கு 10-ம்வகுப்பு தகுதி கொண்ட அரசு ஊழியர்களுக்கு இணையாகவும் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியம் நிர்ணயிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×