search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்: உழவர்கரை நகராட்சி ஊழியர் சங்கம் தீர்மானம்
    X

    மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்: உழவர்கரை நகராட்சி ஊழியர் சங்கம் தீர்மானம்

    மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு நடைமுறைபடுத்த வேண்டும் என்று உழவர்கரை நகராட்சி ஊழியர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    புதுச்சேரி:

    உழவர்கரை நகராட்சி நிரந்தர ஊழியர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மத்தியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் 2018-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கவுரவத் தலைவராக லட்சுமணசாமி, தலைவராக மாணிக்கம், பொதுச் செயலாளராக பழனிவேலு, பொருளாளராக வாழ்முனி, துணை பொருளாளராக ஏழுமலை மற்றும் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களாக ஆறுமுகம், ரமேஷ், முருகன், சுப்ரமணி, ஏழுமலை, தெய்வநாயகம், சிவஞானம்.

    மகளிர் அணி செயலாளராக கோமதி, பார்வதி, தமிழரசி, அமிர்தம், ஜெயா, எழிலரசி, மேரி ஆகியோர் தேர்வு செயய்யப்பட்டனர்.

    செயற்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தனியார் நிறுவனம் முக்கியமான வீதிகளில் மண்ணை சுத்தம் செய்யபடுவதில்லை. இதனால் பல உயிர்கள் சேதங்கள் ஏற்படுகிறது. இதன் மீது புதுவை அரசாங்கம், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசு அறிவித்த அகவிலை படியை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு நடைமுறைபடுத்த வேண்டும்.

    7-வது ஊதியக் குழு உத்தரவை வழங்க வேண்டும் என்று கடந்த 1½ ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறோம். பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், புதுவை அரசு துப்புரவு ஊழியர்களை அலட்சியப்படுத்திக் கொண்டு வருகிறது 7-வது ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் தீவிரமான முறையில் போராட்டங்களை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×