search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல்லில் இருந்து குமுளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல் மற்றும் பழனியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    திண்டுக்கல்:

    அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல் மற்றும் பழனியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இது குறித்து திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் கூறியுள்ளதாவது:-

    திண்டுக்கல், பழனி, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    மேலும் அடுத்தமாதம் (ஜனவரி) 16-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இந்த சமயங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக நாளை மறுநாள் முதல் அடுத்தமாதம் 16-ந்தேதி வரை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் திண்டுக்கல், பழனி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து குமுளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    குமுளியில் இருந்து கேரள போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மண்டல பூஜையையொட்டி சுமார் 100 பஸ்களும், மகரவிளக்கு பூஜையின் போது தேவைக்கு ஏற்ப அதைவிட கூடுதலாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு வழிகாட்ட வசதியாக திண்டுக்கல், பழனி, திருச்சி, மதுரை, குமுளி ஆகிய பஸ் நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.திண்டுக்கல்:

    அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல் மற்றும் பழனியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இது குறித்து திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் கூறியுள்ளதாவது:-

    திண்டுக்கல், பழனி, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    மேலும் அடுத்தமாதம் (ஜனவரி) 16-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இந்த சமயங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். எனவே அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக நாளை மறுநாள் முதல் அடுத்தமாதம் 16-ந்தேதி வரை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் திண்டுக்கல், பழனி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து குமுளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    குமுளியில் இருந்து கேரள போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மண்டல பூஜையையொட்டி சுமார் 100 பஸ்களும், மகரவிளக்கு பூஜையின் போது தேவைக்கு ஏற்ப அதைவிட கூடுதலாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு வழிகாட்ட வசதியாக திண்டுக்கல், பழனி, திருச்சி, மதுரை, குமுளி ஆகிய பஸ் நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×