search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிப்ரவரி மாதம் புதுவை கூட்டுறவு வங்கிகளுக்கு தேர்தல்: கவர்னர் கிரண்பேடி
    X

    பிப்ரவரி மாதம் புதுவை கூட்டுறவு வங்கிகளுக்கு தேர்தல்: கவர்னர் கிரண்பேடி

    புதுவையில் பிப்ரவரி மாதம் கூட்டுறவு வங்கிகளுக்கு நிர்வாகிகள் தேர்தல் சட்ட விதிகளின்படி நடத்தப்படும் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து கவர்னர் கிரண்பேடிக்கு பல்வேறு புகார்கள் வந்தது.

    இதையடுத்து கவர்னர் கிரண்பேடி கூட்டுறவு வங்கி அதிகாரிகளையும், நபார்டு வங்கி அதிகாரிகளையும் கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டரில் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

    புதுவை மாநில கூட்டுறவு வங்கி நிறுவனங்களில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்கள் சில திட்டங்களை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் கூட்டுறவு வங்கிகளுக்கு நிர்வாகிகள் தேர்தல் சட்ட விதிகளின்படி நடத்தப்படும்.

    நபார்டு வங்கிகளில் ஆண்டுக்கு 2 முறையாவது மூத்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை திடீரென வங்கிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு முடிவுகளை இந்தியன் ரிசர்வ் வங்கி மற்றும் கவர்னர் அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும்.


    வங்கிக்கு தொடர்பு இல்லாதவர்களை நிர்வாகத்தில் தலையிட அனுமதிக்க கூடாது. இதனை வங்கி கிளை மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    கூட்டுறவு துறை செயலாளரும் அவ்வப்போது வங்கிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாற்று பணி இடங்களில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை மீண்டும் வங்கியில் பணியாற்ற அனுமதிப்பதை திரும்ப பெற வேண்டும்.

    வங்கி கணக்குகளில் அங்கீகாரமற்ற செலவுகளை பதிவு செய்யக்கூடாது. தனி நபரின் அழுத்தம் காரணமாக எவ்வித கடனும் வழங்க கூடாது. விதிமுறைகளை மீறி வங்கிகளில் ஆட்களை நியமிக்க கூடாது. இந்த நடைமுறைகள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×