search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதுமான அளவு தண்ணீர் குடித்தால் ‘சிறுநீரக கல்’ நோயை தடுக்கலாம் - நிபுணர்கள் தகவல்
    X

    போதுமான அளவு தண்ணீர் குடித்தால் ‘சிறுநீரக கல்’ நோயை தடுக்கலாம் - நிபுணர்கள் தகவல்

    போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் அடித்து செல்லப்பட்டு சிறுநீரகம் பாதுகாக்கப்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    சிறுநீரக நோய்கள் நீரிழிவு மற்றும் அதிக ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் சாதாரணமாகி விட்டது. அதற்கு மூலகாரணமாக சிறுநீரக கல் நோய் விளங்குகிறது.

    தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. உடலில் நீர்சத்து குறைபாடு காரணத்தால் சிறுநீரக கல் நோய் ஏற்படுகிறது.

    அதன் மூலம் பல்வேறு சிறுநீரக நோய்கள் உருவாகின்றன. இவை குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதாலேயே உண்டாகிறது. ஆண்களை விட பெண்களையே சிறுநீரக நோய்கள் அதிக அளவில் தாக்குகின்றன.

    போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் அடித்து செல்லப்பட்டு சிறு நீரகம் பாதுகாக்கப்படுகிறது. தண்ணீர் உடலில் உள்ள பல்வேறு திரவங்களை சமநிலைப்படுத்தி ரத்த அழுத்தத்தை சீரமைக்கிறது. ரத்த சிவப்பணுக்கள் உருவாக உதவுகிறது.

    சிறுநீரக கல் சிறு நீரகத்தின் உள் பகுதியில் தாதுக்களை திரட்டி குவியச் செய்கிறது. இதனால் நாட்பட்ட சிறுநீரக நோய்களும், நீரிழிவு, அதிக அழுத்தம் போன்ற நோய்களும் உருவாகிறது.

    போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பட்சத்தில் நோய் ஏற்படுத்தும் தாது உப்புக்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு உடலில் இருந்து வெளியேற்றப்படும். இதுதவிர மரபணு காரணமாகவும் சிறுநீரக கல் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாகவும் சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறநீரக கற்கள் கால்சியத்தின் மூலம் உருவாகிறது.

    எனவே சிறுநீரக கல் வளர்வதை தடுக்க கால்சிய சத்து குறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்ற கருத்து மக்களிடம் உள்ளது. ஆனால் கால்சியம் சத்துள்ள உணவை அதிக அளவு சாப்பிடுவதன் மூலம் மூன்றில் ஒரு மடங்கு சிறுநீரக நோய் அபாயத்தை தவிர்க்க முடியும் என சிறு நீரகவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×