search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து அதிகாரிகளும் வாராந்திர அறிக்கை அனுப்ப வேண்டும்: கவர்னர் கிரண்பேடி உத்தரவு
    X

    அனைத்து அதிகாரிகளும் வாராந்திர அறிக்கை அனுப்ப வேண்டும்: கவர்னர் கிரண்பேடி உத்தரவு

    அனைத்து அதிகாரிகளும் தாங்கள் அந்த வாரத்தில் செய்த பணிகள் தொடர்பாக அறிக்கையை அனுப்ப வேண்டும் என கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    கவர்னர் கிரண்பேடி அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி வருகிறார். இதனால் கவர்னருக்கும்-அமைச்சரவைக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். “வாட்ஸ்-அப்” மூலம் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனைத்து அதிகாரிகளும் தாங்கள் அந்த வாரத்தில் செய்த பணிகள் தொடர்பாக அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் அந்த அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அதற்கான மாதிரி படிவமும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் இந்த வாரத்தில் ஆய்வுக்கு சென்ற இடங்கள், என்ன காரணங்களுக்காக அங்கு சென்றீர்கள், அதில் என்ன வி‌ஷயம் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது, என்ன பயிற்சி திட்டங்கள் நடத்தப்பட்டது, என்ன ஊக்கம் கொடுக்கப்பட்டது, துறை சார்பாக அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அவர் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அதிகாரிகள் வாரந்தோறும் அனுப்பும் அறிக்கைகளை நான் ஆய்வு செய்வேன், அது சிறப்பாக இருந்தால் பாராட்டுவேன், வேறு தகவல்கள் இருந்தால் அது சம்மந்தமாக குறிப்பிடுவேன். எனது ஆய்வுக்கு அனைவரும் முக்கியத்தும் அளிக்க வேண்டும். இது சம்மந்தமான தொடர் அறிக்கைகளையும் தரவேண்டும்.

    இந்த அறிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளரிடமும் கலந்தாய்வு செய்யப்பட்டு மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தலைமை செயலாளரும் இது சம்மந்தமான அறிக்கைகளை எனக்கு தர வேண்டும். இந்த பணிகளால் புதுவையில் மாற்றத்தை உருவாக்க முடியும். மக்களுக்கு சிறப்பாக செயலாற்ற முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×