search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் ஏரி-குளங்களை தூர்வார வேண்டும்: தே.மு.தி.க. வலியுறுத்தல்
    X

    அரியலூர் மாவட்டத்தில் ஏரி-குளங்களை தூர்வார வேண்டும்: தே.மு.தி.க. வலியுறுத்தல்

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஏரி-குளங்களை தூர்வார வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் இராம.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட அவைத்தலைவர் ஜோசப்சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கவியரசன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் எழிலரசன், தங்கஜெயபாலன், தேன்மொழிசம்பந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் ஜேக்கப் உட்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு :-

    அரியலூர் பஸ் நிலையத்தில் 24 மணிநேரமும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வண்ணம் போலீசாரை நியமிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தொடர் சாலை விபத்தினை தவிர்க்க சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரியலூர் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி அமைத்திட ஆவண செய்ய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிவோருக்கு குடியிருப்பு பகுதியை அமைத்து கொடுக்க வேண்டும்.

    அரியலூர் மாவட்டத்தில் அனைத்து ஏரி, குளங்களுக்கு வரும் வரத்து வாரி வாய்க்கால்கள் ஆக்கிரமித்துள்ளதால் வரண்டு கிடக்கும் குளங்களை தூர்வார வேண்டும். செந்துறை -ஆர்.எஸ். மாத்தூர் சாலை வேலை ஆரம்பித்து கிடப்பில் போடப்பட்டுள்ளது, அதை உடனே முடிக்க வேண்டும். திருமானூர் ஒன்றியம் முடிகொண்டான் - சேனாபதி சாலை போடப்பட்ட 2 மாதத்திலேயே மிகவும் பழுதடைந்துள்ளது. அந்த சாலையை உடனே சீர் செய்திட வேண்டும். அரியலூர் ஒன்றியம் கடுகூர் - சென்னிவனம் சாலையை உடனே சீர் செய்திட வேண்டும். உட்பட பல்வேறு தீமானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன் நன்றி கூறினார்.
    Next Story
    ×