search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் வழக்கு: அமைச்சர் சரோஜா மனு தள்ளுபடி
    X

    தேர்தல் வழக்கு: அமைச்சர் சரோஜா மனு தள்ளுபடி

    ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றியை எதிர்த்து வி.பி.துரைசாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமைச்சர் சரோஜா தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    சென்னை:

    ராசிபுரம் தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் சரோஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வி.பி.துரைசாமியை விட 9 ஆயிரத்து 631 ஓட்டுகள் அதிகம் பெற்று சரோஜா வெற்றி பெற்றார். தற்போது சரோஜா அமைச்சராக உள்ளார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வி.பி.துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

    அதில், ‘அதிகார துஷ்பிரயோகம் செய்தும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்று விட்டார். அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணையில் உள்ளது.

    இந்த நிலையில், வி.பி.துரைசாமி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவரது வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டில் அமைச்சர் சரோஜா மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், சரோஜா மனுவை தள்ளுபடி செய்தார். வி.பி.துரைசாமி தாக்கல் செய்த தேர்தல் வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி சரோஜாவுக்கு உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    Next Story
    ×