search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் 7 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறந்தன
    X

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் 7 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறந்தன

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் 7 நாட்களாக மூடிக்கிடந்த பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் வழக்கம்போல காலை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி ஒக்கி புயல் தாக்கியது. கடந்த 29-ந்தேதி இரவு முதலே பலத்த மழையும், சூறைக்காற்றும் வீசியதால் மாவட்ட நிர்வாகம் 30-ந்தேதி குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.

    அதன் பிறகு ஒக்கி புயல் ஏற்படுத்திய பாதிப்பால் மாவட்டம் இருளில் மூழ்கியது. எங்குமே மின் இணைப்பு இல்லாததால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    புயலால் வீடுகளை இழந்தவர்கள் பலர் அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். சில பள்ளிகளில் நிவாரண முகாம்களும் செயல்பட்டன.

    அதோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் இணைப்பு வழங்கப்படாததால் மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை 5 மற்றும் 6-ந்தேதிக்கும் நீட்டித்தது.

    பள்ளி, கல்வித்துறை சார்பில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்று அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. இதனால் குமரி மாவட்ட நிர்வாகம் இன்று பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுத்தது.

    ஒக்கி புயலால் 7 நாட்களாக மூடிக்கிடந்த பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் வழக்கம்போல காலை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர்.


    Next Story
    ×