search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு
    X

    உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

    உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    திருப்பூர்:

    உடுமலை அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் பழனிசாமி முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சுகாதாரத் துறை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்து வதற்காக நடப்பாண்டில் ரூ.13 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.5 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பெறப்பட்டுள்ளது.

    உடுமலைஅரசு மருத்துவ மனையில் நாளொன்றுக்கு சுமார் 1500 க்கும் மேலான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மையம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக பிரசவ காலத்தின் போது தாய் இறப்பு வீதம் மற்றும் குழந்தைகள் இறப்பு வீதம் முழுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்க வரும் நிதியாண்டில், முதல்- அமைச்சர் அனுமதியுடன் உடுமலை அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் மையம், 100 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் மற்றும் தீவிர விபத்து சிகிச்சை பிரிவுகளும் தொடங்குவதற்கு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக உடுமலைஅரசு மருத்துவமனை மற்றும் குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ பிரிவுகள் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளையும் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்நிகழ்வின் போது பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன், இணைஇயக்குநர் சுகாதாரப்பணிகள் சவுந்திர பாண்டியன், பொது சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஜெயந்தி, உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியிலும் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,

    தொற்றுநோய், புற்றுநோய் கட்டுப்படுத்துவது, குழந்தை இறப்பு, மகப்பேரின்போது தாய் இறப்பு விகிதத்தை குறைத்தது போன்றவற்றில் தமிழக சுகாதாரத்துறை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் 580 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அடுத்த ஒரு மாத்திற்குள் 110 சித்தமருத்துவர்கள், 1000 செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் காலிப்பணியிடங்கள் இல்லாத நிலை தற்போது உருவாகியுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையில், ஒப்பந்தப்பணியாளர் நோயாளிக்கு சிகிச்சையளித்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
    Next Story
    ×