search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சி அருகே 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்
    X

    செஞ்சி அருகே 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 2 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பழவலம் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும், 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இது குறித்த தகவலின் பேரில் சமூக நல திட்ட அதிகாரிகள் லலிதா, விஜயா ஆகியோர் தலைமையில் சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ மற்றும் அதிகாரிகள், திருமணம் நடக்க இருந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவருடைய பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அதிகாரிகள், 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, அந்த சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதேபோல் செஞ்சியை சேர்ந்த 26 வயதுடைய வாலிபருக்கும், 17 வயதுடைய சிறுமிக்கும் நடக்க இருந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    Next Story
    ×