search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிலாதுநபி பண்டிகை: நாராயணசாமி - தலைவர்கள் வாழ்த்து
    X

    மிலாதுநபி பண்டிகை: நாராயணசாமி - தலைவர்கள் வாழ்த்து

    நாளை மிலாதுநபி பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    சகோதரத்துவத்தையும், ஈகையின் மகத்துவத்தையும் உலக மக்களுக்கெல்லாம் உணர்த்தி அதனையே தன்வாழ்நாள் செய்தியாக வாழ்ந்து காட்டியவர் நபிகள் நாயகம். அவர் பிறந்த அற்புத தினமாக மிலாதுநபி விளங்குகிறது. மனித நேயத்தில் அவர் கொண்டிருந்த அக்கறையின் காரணமாகவே இஸ்லாத்தை ஒரு மதமாக மட்டுமின்றி மனிதர்களின் வாழ்வியல் நெறிமுறைகளுக்கான மார்க்கமாகவும் வடிவமைத்தார். தான் வரையறுத்ததை ஏட்டோடு நிறுத்தி விடாமல் அதன்வழியே வாழ்ந்து காட்டியவர் நபிகள் நாயகம்.

    இந்திய திருநாட்டில் வாழும் இஸ்லாமியர்களும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்வதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். பேரிடர் காலங்களிலும், ஆபத்தான தருணங்களிலும் இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் பகுதி மக்களுக்கு ஓடோடி உதவி செய்வது நபிகள் நாயகத்தின் வழியில் அவர்கள் நடப்பதின் அடையாளமேயாகும்.

    நாட்டிலும், வீட்டிலும் அமைதி தவழ அனைத்து மதத்தினரும் தங்களின் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டி நெறிமுறைகளை நபிகள் நாயகம் அளித்துள்ளார். அவர் பிறந்த இந்த இனிய தினத்தில் இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், வளமுடனும், நலமுடனும் வாழ இந்நாளில் இறைவனை வேண்டிக்கொண்டு அனைவருக்கும் எனது இனிய மிலாதுநபி தினவாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    அல்லாவின் தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்நன்னாளில் நாடு நலம் பெறவும், ஒட்டு மொத்த புதுவை யூனியன் பிரதேசமும் வளம்பெறவும், எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை அன்பால் எதிர்கொண்டு, எதிரிகளையும் அரவணைக்க வேண்டும் என்ற தத்துவத்தை கடைபிடித்து வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்து நபிகள் நாயகம் காட்டிய பாதையில் சென்று உன்னத நிலையை அடைந்திடவும் எல்லாம் வல்ல இறைவனை அன்புன் வேண்டுகிறேன்.

    இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் குறிப்பாக புதுவை யூனியன் பிரதேச இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மிலாதுநபி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    வேற்றுமை மறந்து, அனைவரிடமும் அன்பு காட்டி வரியவர்களுக்கு கொடுத்து மகிழும் ஈகை பண்பினை நெஞ்சில் நிறுத்தி நீதி வழுவாமல் வாழ்வதற்கு வழிகாட்டிய நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் அவரின் உபதேசங்களை பின்பற்றி அனைவரும் மிலாதுநபி திருநாளுக்கு பெருமை சேர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். நபிகள் நாயகம் அவதரித்த இந்நாளில் இஸ்லாமிய சமுதாய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாதுநபி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    எல்லாப்புகழும் இறைவனுக்கே எனும் அருளுரை தந்த நபிபெருமான் அவர்கள் இவ்வுலகில் அவதரித்த தினமான மிலாதுநபி தினத்தை பெருமையுடன் நினைவில் கொள்வோம். அவரது அருளுரையின்படி நாம் இவ்வுலகில் நிகழ்த்தும் சாதனைகள் அனைத்தும் அவரது வழிநடத்தலின்படி வந்தவையே என்பதை நாம் உணர வேண்டும்.

    அனைத்து உலக நாடுகளையும் நோக்கும்போது சிறுபான்மையினராக இருந்தாலும் நம்மோடு இணைந்து நமது கஷ்டநஷ்டங்களில் பங்கு பெற்று சகோதரத்துவத்துடன் வாழும் முஸ்லிம் சகோதர்களுக்கு, நம் பாராட்டுகளையும், பாசம் கலந்த மிலாதுநபி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

    மிலாதுநபி என்பது முகமது நபியின் பிறந்த நாளாகும். இந்தநாள் இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் திருநாளாகும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இந்தியாவின் தனி சிறப்பம்சமாகும். ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவராயினும் அயல் நாட்டினர் அனைவரும் போற்றிடும் வகையில் நபிகள் நாயகம் உலகத்துக்கே உதாரணமாக வாழ்ந்தனர். இந்த நாளை மனிதநேயம் காக்கும் மகத்தான நன்னாளாக கொண்டாடி மகிழ்வோம். அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது இனிய மிலாதுநபி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இஸ்லாமிய தத்துவத்தை ஒரு வாழ்க்கை நெறியாக மக்களுக்கு போதித்து அதன்படியே வாழ்ந்து காட்டியவர் நபிகள் பெருமான். எளியோரிடம் கருணை காட்டி, தூயசிந்தனையுடன், பசித்த மானுடத்திற்கு உணவளியுங்கள் என்று போதித்த அண்ணல் நபிகளின் போதனைகள் எக்காலத்திற்கும் பொருந்தும். அண்ணலின் போதனைகளை வாழ்வில் கடைபிடித்து ஏழை-எளிய மக்களின் நல்வாழ்விற்கு தொண்டு புரிந்து சமத்துவம், சகோதரத்துவம் போற்றி பெருஉவகையுடன் மிலாது பெருநாளை கொண்டாடுவோம்.

    இந்த இனிய திருநாளில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்கிறேன்.

    Next Story
    ×