search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரை கண்டித்து மதகடிப்பட்டில் காங்கிரஸ் உண்ணாவிரதம்
    X

    கவர்னரை கண்டித்து மதகடிப்பட்டில் காங்கிரஸ் உண்ணாவிரதம்

    புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    திருபுவனை:

    திருபுவனையை அடுத்த மதகடிப்பட்டில் புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பபெற கோரியும் திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு தலைவர் எத்திராஜிலுநாயுடு தலைமை தாங்கினார்.

    இந்த உண்ணாவிரதத்தில் திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கவர்னர் கிரண்பேடி புதுவை மக்களுக்கு புதுவை அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை தடுக்கிறார். மேலும் பல்வேறு நலத்திட்ட கோப்புகளில் கையொப்பம் இடாமல் நிறுத்தி வைக்கிறார். இதனால் புதுவை மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்காமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும். அல்லது கவர்னர் தனது போக்கை திருத்திகொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் கவர்னரை எதிர்த்து புதுவை முழுவதும் பல்வேறு போராட்டங்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, புதுவை அரசின் டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    மாலை 6 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை பழசாறு கொடுத்து முடித்து வைத்தனர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் தனுசு, பாஸ்கர், முரளி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×