search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்: தமிழக அரசுக்கு பாராட்டு
    X

    பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்: தமிழக அரசுக்கு பாராட்டு

    திருச்செந்தூரில் அமரர் சிவந்தி ஆதித்தனாருக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசுக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    தமிழக அரசின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள், மற்றும் நாடார் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்: பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பது பாராட்டி வரவேற்கத்தக்கது.

    புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி. சண்முகம்: தினத்தந்தியின் அபாரமான வளர்ச்சிக்கு பெரிதும் காரணமான பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்செந்தூரில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்கள்.

    சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் ஏ.நாராயணன்: டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி, பத்திரிகை, தொழில் துறைகளில் பல்வேறு சாதனை படைத்துள்ளவர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றிருந்த கால கட்டத்தில் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியவர். பல்வேறு சமுதாய பணிகளையும், ஆன்மீக பணிகளையும் சிறப்புற செய்து முடித்தவர்.

    அத்தகைய சாதனைகளுக்கு சொந்தக்காரரான பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித் தனாருக்கு திருச்செந்தூரில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் இட்லி இனியவன்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தினத்தந்தியை வழி நடத்திய சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் கட்டுவது போற்றுதலுக்கு உரியது.

    சென்னை வாழ் நாடார்கள் சங்கம்

    சென்னை வாழ் நாடார்கள் சங்க பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து:

    தன்னலம் கருதாமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆன்மீகம், பத்திரிகை, விளையாட்டு துறை என பல துறைகளில் சரித்திர சாதனைகள் பல புரிந்து தென்காசி ராஜகோபுரம் கண்டு வலது கை கொடுப்பது இடது கை அறியா வண்ணம் நன்கொடைகள் வாரி வழங்கிய வள்ளல் பா.சிவந்தி ஆதித்தனார்.

    சான்றோர் குல திலகம், பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் எனப் பாராட்டப்பட்ட பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் நினைவை போற்றும் வகையில் அவர் பிறந்த புண்ணிய பூமியான தூத்துக்குடி மாவட்டம் திருச் செந்தூரில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு சார்பில் உத்தரவிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

    இந்த அறிவிப்பு வரலாற்று சாதனை புரிந்தவர்களுக்கு இம்மண்ணில் இடம் உண்டு என்பதை உறுதி செய்வதாக உள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மேலும் பல சாதனையாளர்களை ஊக்குவிக்க வழிவகை செய்யும்.

    மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து நாடார் சமுதாய மக்களுக்கும் இந்த அறிவிப்பு மட்டமற்ற மகிழ்ச்சியுயையும், எல்லையில்லா ஆனந்தத்தையும் வழங்கி உள்ளது.

    எனவே சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் சார்பிலும் அனைத்து நாடார் அமைப்புகள் சார்பி லும் தமிழக அரசுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


    Next Story
    ×