search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து துறையில் உள்ள கடனை அடைக்க செயல்திட்டம்: விஜயகாந்த் வலியுறுத்தல்
    X

    போக்குவரத்து துறையில் உள்ள கடனை அடைக்க செயல்திட்டம்: விஜயகாந்த் வலியுறுத்தல்

    போக்குவரத்து துறையில் உள்ள ரூ.18 ஆயிரம் கோடி கடனை அடைக்க உடனே தமிழக அரசு செயல் திட்டம் தீட்டவேண்டும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து துறைக்கு சுமார் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. இந்த கடனுக்காக ஆண்டுதோறும் ரூ.600 கோடிக்கும் மேல் வட்டிக்கட்டும் அவல நிலையில் போக்குவரத்து துறை உள்ளது. அதுமட்டுமல்லாமல் பணம் பற்றாக்குறையால் பஸ்களுக்கு உதிரிபாகங்கள் வாங்குவதற்காக 325 பணிமனைகளில் சுமார் 286 பணிமனைகளும், பெரும்பாலான அரசு பஸ்களும் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. எனவே நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை வல்லுனர் குழுவின் மூலம் ஆய்வு செய்யவேண்டும்.



    இவ்வாறு செய்யப்படும் ஆய்வின் மூலம் கிடைக்கும் நஷ்டத்துக்கான காரணத்தை அறிந்து போக்குவரத்து துறையில் உள்ள ரூ.18 ஆயிரம் கோடி கடனை அடைக்க உடனே தமிழக அரசு செயல் திட்டம் தீட்டவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×