search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் வன பகுதியில் பல கோடி மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தல்: வனசரகர்- பாதுகாவலர் பணியிடை நீக்கம்
    X

    பெரம்பலூர் வன பகுதியில் பல கோடி மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தல்: வனசரகர்- பாதுகாவலர் பணியிடை நீக்கம்

    வேப்பந்தட்டை அருகே காப்புகாடு என்ற வன பகுதி உள்ளது. இந்த வனபகுதியில் பல கோடி மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக வனசரகர் , பாதுகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    குன்னம்:

    இந் நிலையில் கடந்த சில வருடங்களாக வேப்பந்தட்டை அருகேயுள்ள ராஞ்சன்குடி வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி , குள்ளன்  மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் அந்த பகுதியில் உள்ள மரங்களை வெட்டி லாரியில் கடத்தினர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் பெரம்பலூர் வன சரகர் மோகன், வன பாதுகாவலர் ஆணையப்பன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மரம் வெட்டி கடத்தப்படுவது அதிகமானது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து திருச்சி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து திருச்சி,விழுப்புரத்தை சேர்ந்த வனக்குழுவினர் சுமார் 30 பேர் ரஞ்சன் குடி வனப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல கோடி மதிப்புள்ள மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வனக்குழுவினர் இது குறித்து பெரம்பலூர்-அரியலூர் வன அலுவலர் (பொ) மோகனிடம் புகார் செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் வன சரகர் மோகன் தலைமறைவாகி விட்டார். புகாரின்  வன பாதுகாவலர் ஆணையப்பன் கைது செய்யப்பட்டார்.
     
    இந்த வழக்கு தொடர்பாக வனசரகர் மோகன், பாதுகாவலர் ஆணைப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×