search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேன்கனிக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    தேன்கனிக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு

    தேன்கனிக்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கதிரவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இதன்கீழ் பேரூராட்சிக் குட்பட்ட அண்ணாநகர், பட்டாளம்மன் கோவில் தெரு, மஜீத்தெரு, தேர் பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகள், நீர் சேமிப்பு பாத்திரங்கள், வீடுகளின் சுற்றுப்புறத்தில் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த கலெக்டர் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    மேலும் சிறு பாத்திரங்கள், பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசு எவ்வாறு உற்பத்தி ஆகிறது? அதனை எவ்வாறு தவிர்த்து கொசு புழுக்களை அழிக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

    மேலும் வீடுகளிலும் வீட்டின் வெளிப்புறங்களிலும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின்போது தேன்கனிக்கோட்டை தாசில்தார் மணிமொழி, மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் பிரியராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன், மருத்துவ அலுவலர் விஸ்வநாத், வருவாய் ஆய்வாளர் அரவிந்தன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், சுகா தார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×