search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ் அணியினர் என ஒதுக்க வேண்டாமே: மைத்ரேயன் பேஸ்புக் பதிவால் மீண்டும் பரபரப்பு
    X

    ஓ.பி.எஸ் அணியினர் என ஒதுக்க வேண்டாமே: மைத்ரேயன் பேஸ்புக் பதிவால் மீண்டும் பரபரப்பு

    அ.தி.மு.க,வின் நிர்வாகிகள் தொண்டர்களை ஓ.பன்னீர் செல்வம் அணியினர் என ஒதுக்காமல் அரவணைத்து செல்ல வேண்டும் என மைத்ரேயன் எம்.பி.யின் பேஸ்புக் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க.வின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் இணைவதற்கு முன்பாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்தார். சமீபத்தில், அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் “ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” என்று பதிவிட்டிருந்தார்.

    அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த பதிவால் அக்கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதோ? என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது. இந்நிலையில், “நான் பதிவிட்டது எனது தனிப்பட்ட கருத்து இல்லை. பெரும்பாலான கழக அடிமட்ட தொண்டர்களின் உணர்வை எதிரொலித்தேன்” என இன்று பதிவு செய்துள்ளார்.

    மேலும், மேற்கண்ட பதிவில் ஏராளாமானோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ள நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, “கட்சியின் மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்களை ஓபிஎஸ் அணி என்று ஒதுக்காமல் அரவணைத்து சென்றால் நன்றாக இருக்கும்” என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    மைத்ரேயனின் தொடர் பேஸ்புக் பதிவுகளால், ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணிகளிடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×