search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் 2268 ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் 2268 ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலையை தமிழக அரசு உயர்த்தியை கண்டித்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2268 ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 431 ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ராணிப்பேட்டை வண்டி மேட்டு தெருவில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு நடந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கணியம்பாடியில் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் 567 ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சதுப்பேரியில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாஸ்கரன், அவைத் தலைவர் தேவேந்திரராஜா, மாவட்ட துணை செயலாளர் மலர்விழி, ஒன்றிய செயலாளர் பாபு, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு அங்காடி ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, விஜயசங்கர், முகமதுசாகிப், முன்னாள் கவுன்சிலர் கோபி மற்றும் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, முருகபெருமாள், முருகன், சுந்தர்விஜி, வக்கீல் ராஜி, மகளிரணி சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 528 ரே‌ஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மாடப்பள்ளி ரே‌ஷன் கடை முன்பு நல்லதம்பி எம்.எல்.ஏ, தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    துரிஞ்சாபுரம் ஒன்றியம், சாலையனூரில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு பிச்சாண்டி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத்தில் உள்ள 742 ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×