search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பத்தூர் - மணலி பகுதியில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்
    X

    அம்பத்தூர் - மணலி பகுதியில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம்: முதல்வர் திறந்து வைத்தார்

    அம்பத்தூர், மணலி பகுதியில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    அம்பத்தூர்:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், மதுரவாயல், மணலி, போன்ற பகுதிகளில் ரூ.600 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை மின் நிலையத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    கொரட்டூர் பகுதியில் 46 லட்சம் மதிப்பிலான வரி பந்தாட்டம் விளையாட்டு மைதானம், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் 83.9 கோடி செலவில் கட்டப்பட்ட துணை மின் நிலையத்தையும் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

    இதனை வரவேற்று அம்பத்தூரில் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் பென்ஜமின், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மண்டல அதிகாரி பாலசுப்பிரமணியன், பகுதி செயலாளர் என்.அய்யனார், மற்றும் எம்.டி.மைக்கேல்ராஜ், கே.பி. முகுந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×