search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா சுயநினைவு இல்லாத போது கைரேகை பதிவு செய்யப்பட்டது: தி.மு.க. நிர்வாகி சரவணன் பேட்டி
    X

    ஜெயலலிதா சுயநினைவு இல்லாத போது கைரேகை பதிவு செய்யப்பட்டது: தி.மு.க. நிர்வாகி சரவணன் பேட்டி

    ஜெயலலிதா சுயநினைவு இல்லாத போது கைரேகை பதிவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கிறார்கள். கைரேகையை வாங்கும் போது வீடியோ பதிவு அவசியம் என்று தி.மு.க. நிர்வாகி சரவணன் கூறினார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் ஆஜராகி விளக்கம் அளித்த தி.மு.க. நிர்வாகி டாக்டர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைக்கும், அதன் பிறகு வந்த தகவல்களுக்கும் நிறைய முரண்பாடு உள்ளது. இதை விரிவாக கமி‌ஷனில் விவரித்துள்ளோம்.

    ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது இடைத்தேர்தலுக்கு சின்னம் ஒதுக்குவதற்காக பெறப்பட்ட கைரேகையிலும் சந்தேகம் உள்ளது. அவர் சுயநினைவு இல்லாத போது கைரேகை பெறப்பட்டதாக சந்தேகிக்கிறோம்.

    ஏனென்றால் கைரேகை பெறும் போது தெளிவாக காணப்படும். ஆனால் ஜெயலலிதாவின் கைரேகை தெளிவாக இல்லை. இதை வைத்து பார்க்கும் போது சுயநினைவு இல்லாத போது கைரேகை பதிவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கிறார்கள்.

    சட்டப்படி சுயநினைவு இல்லாத போது கைரேகை பெறுவது குற்றமாகும். கைரேகையை வாங்கும் போது வீடியோ பதிவு அவசியம் வேண்டும். ஆனால் அதுவும் இல்லை என்கிறார்கள்.

    விசாரணை கமி‌ஷனில் மேலும் பல ஆவணங்களை நாளை தாக்கல் செய்கிறோம். அப்போது மேலும் பல தகவல்களை கமி‌ஷனில் தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×