search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணியில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.10 லட்சம் நிலம் மோசடி: தொழிலாளி கைது
    X

    திருத்தணியில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.10 லட்சம் நிலம் மோசடி: தொழிலாளி கைது

    திருத்தணியில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.10 லட்சம் நிலம் மோசடியில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    திருவள்ளூர்:

    திருத்தணி பெரியார் நகரை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருக்கு சொந்தமான நிலம் சீனிவாச கிராமத்தில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி அர்ஜுணன் என்பவர் வேளச்சேரி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கொண்டு ஆள் மாறாட்டம் செய்து திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது தெரிந்தது.

    இது குறித்து ஞானசேகர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவுப்படி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ஞானவேல் விசாரணை நடத்தினார். அப்போது போலி ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து அர்ஜுணன் நிலத்தை அபகரித்து இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து அர்ஜுணனை போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×