search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு ரூ.174 கோடி அனுப்பி முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை
    X

    சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு ரூ.174 கோடி அனுப்பி முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை

    சென்னையில் உள்ள 6 நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தது போல், போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.174 கோடி வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளதை சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் உள்ள 6 நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தது போல், போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.174 கோடி வெளிநாடுகளுக்கு அனுப்பி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதை சி.பி.ஐ. போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    ஸ்டேட் பாங்க் ஆப் பிகானர் அன்ட் ஜெய்ப்பூர் என்ற வங்கியின் சென்னை கிளைகள் மூலம் இதுதொடர்பான பண பரிமாற்றம் நடந்தது தெரியவந்துள்ளது.6 நிறுவனங்கள் மூலம் 486 முறை வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்பியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு மேலே குறிப்பிடப்பட்ட வங்கியின் 3 அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டுள்ளனர்.

    இதுபற்றி சி.பி.ஐ. போலீசார் 3 வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 6 நிறுவனங்கள் மீதும், அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விசாரணை முடிந்த பிறகு கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.
    Next Story
    ×