search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொறுப்புடன் பேச வேண்டும்: திருநாவுக்கரசர்
    X

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொறுப்புடன் பேச வேண்டும்: திருநாவுக்கரசர்

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொறுப்புடன் பேச வேண்டும் என்று மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவ படம் மலர்களால் இன்று அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, சீரஞ்சீவி, செல்வபெருந்தகை, ஜான்சிராணி, கராத்தே தியாகராஜன், தி.நகர் ஸ்ரீராம். க.வீரபாண்டியன், எஸ்.சுந்தர்ராஜ், நாச்சிக்குளம் சரவணன், டாக்டர் ஜெ.ஜெயராஜ், புதூர் பிரகாஷ், தி.நகர் விக்னேஷ்வரன், பட்டுக்கோட்டை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இது கண்டிக்கதக்கது.



    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த சம்பவம் குறித்து பேசும் போது கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று பொறுப்பற்ற பதிலை கூறுகிறார். நாட்டின் பாதுகாப்பு துறை பொறுப்பு வகிக்கும் அவர் பொறுப்புடன் பேச வேண்டும். இந்த சம்பவத்தை மறைக்க பார்க்க முயற்சிக்க கூடாது.

    தமிழக விவசாயிகள் டெல்லியில் 3 மாதங்களாக போராட்டம் நடத்தியும் மோடி அரசு விவசாயிகள் மீது அக்கறை கொள்ளவில்லை. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய முன்வரவில்லை.

    முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் விவசாயிகளின் ரூ.80 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்து இருந்தார். தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் விவசாயிகளை காப்பாற்ற முன்வரவேண்டும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
    Next Story
    ×