search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசின் செயல்பாடு படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது: திவாகரன்
    X

    தமிழக அரசின் செயல்பாடு படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது: திவாகரன்

    தமிழக அரசின் நடவடிக்கை படுபாதாளத்திற்கு சென்று விட்டது என மன்னார்குடியில் சசிகலாவின் தம்பி திவாகரன் கூறியுள்ளார்.
    மன்னார்குடி:

    மன்னார்குடியில் சசிகலாவின் தம்பி திவாகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனது வீட்டில் வருமான வரி சோதனை கடந்த 9-ந்தேதி முதல் நடந்தது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டனிலும் சோதனை நடத்தி உள்ளனர். அதிகாரிகள் அவர்களின் கடமையை செய்கிறார்கள். இதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. முன்பு தலைமை செயலாளர் அறையில் கூட சோதனை நடைபெற்றது. அது சம்பந்தமாகவும் நடவடிக்கை நிச்சயம் இருக்கும். தமிழக கவர்னரின் நடவடிக்கை குறித்து எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.டி உள்ளது. தேவைப்பட்டால் அதனை வெளியிடுவோம்.

    வருமான வரி அதிகாரிகள் அனுப்பிய சம்மனில் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. அவர்கள் தேதி தெரிவிக்கும் போது ஆஜராவேன். 2014-ம் ஆண்டு முதல் என்மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகள் முடிந்துவிட்டது.

    நான் தற்போது கட்சியில் எந்த பொறுப்பிலும் செயல்படவில்லை. இப்பகுதியில் உள்ள தொண்டர்களுக்கு அரனாக இருக்கின்றேன். தமிழக அரசின் நடவடிக்கை படுபாதாளத்திற்கு சென்று விட்டது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×