search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

    மணல் குவாரிகளை மூடக்கோரி அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு ஐக்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் பொதுப்பணித்துறையே மணல் அள்ளி விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் போதுமான மணல், நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்கவில்லை. இடைத்தரகர்களுடன் அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து கொண்டு முறைகேட்டில் ஈடுபடுவதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அதிக விலைக்கும் விற்கப்பட்டு வருகிறது.

    ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடுடன், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுப்பதுடன், இதுவரை நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவும், ஆறுகள், நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக உடனடியாக அனைத்து மணல் குவாரிகளையும் மூடவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.



    இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    பின்னர் விசாரணையை வருகிற டிசம்பர் 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×