search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்டர் மீடியன் மீது டிரெய்லர் லாரி மோதி கவிழ்ந்ததில் டிரைவர் பலி
    X

    சென்டர் மீடியன் மீது டிரெய்லர் லாரி மோதி கவிழ்ந்ததில் டிரைவர் பலி

    ராசிபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது டிரெய்லர் லாரி மோதி கவிழ்ந்ததில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    ராசிபுரம்:

    திருச்சி பொன்மலையில் இருந்து ரெயில் தண்டவாளங்களை ஏற்றிக் கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சேலம் மாவட்டம், ஓமலூர் ரெயில் நிலையத்திற்கு சென்றது.

    இன்று அதிகாலையில் சேலத்தை நோக்கிச் சென்ற இந்த டிரெய்லர் லாரி ராசிபுரம் அருகேயுள்ள சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகில் சென்றபோது சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மீது மோதி கவிழ்ந்தது.

    இதில் டிரெய்லர் லாரியில் இருந்த ரெயில் தண்டவாளங்கள் ரோட்டில் சரிந்தன. லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நசுங்கியது. இதில் தண்டவாளங்கள் நசுக்கியதில் டிரெய்லர் லாரியின் டிரைவர் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த செல்வம் (வயது 27) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான டிரைவர் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    டிரெய்லர் லாரி கவிழ்ந்து ரோட்டில் தண்டவாளங்கள் சரிந்து காணப்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து லாரி ஓட்டுனர்கள் மற்றும் டிரைவர்கள் கூறிய தாவது:-

    சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் உயரம் தரை மட்ட அளவில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சென்டர் மீடியன் இருப்பது தெரியவில்லை.

    எனவே சென்டர் மீடியன் சுவரை உயர்த்தி கட்ட வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வளைவு இருக்கும் இடத்தில் கட்டிங் (பிரிவு) இருக்க கூடாது. விபத்து நடந்த ரோட்டின் கிழக்குப்புறம் மிகவும் பள்ளமாக உள்ளது. எந்தவிதமான சிக்னல் லைட்டும் இல்லை. இதனால் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. எனவே இது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×