search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழில் பேசிய குற்றத்துக்காக ரூ.300 அபராதம்: பள்ளி நிர்வாகம் மீது கோவை கலெக்டரிடம் மாணவி புகார்
    X

    தமிழில் பேசிய குற்றத்துக்காக ரூ.300 அபராதம்: பள்ளி நிர்வாகம் மீது கோவை கலெக்டரிடம் மாணவி புகார்

    தமிழில் பேசிய குற்றத்துக்காக 300 ரூபாய் அபராதம் விதித்த தனியார் பள்ளி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட கலெக்டரிடம் ஒன்பதாம் வகுப்பு மாணவி இன்று புகார் அளித்துள்ளார்.
    கோவை:

    தமிழில் பேசிய குற்றத்துக்காக 300 ரூபாய் அபராதம் விதித்த தனியார் பள்ளி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட கலெக்டரிடம் ஒன்பதாம் வகுப்பு மாணவி இன்று புகார் அளித்துள்ளார்.

    கோவை செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி கழிப்பறைகளை சுத்தப்படுத்தும் பணியில் மாணவ-மாணவிகளை பயன்படுத்துவதாகவும், ஆங்கிலத்தில் பேசாமல் தமிழில் பேசியதற்காக தனக்கு 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி இன்று கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரனிடம் இன்று புகார் மனு அளித்தார்.

    மேலும், மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அளிக்க அந்தப் பள்ளி நிர்வாகம் 15 ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள அந்த மாணவி இவ்விவகாரங்கள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
    Next Story
    ×