search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடியில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
    X

    பரமக்குடியில் மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

    பரமக்குடியில் மணல் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

    பரமக்குடி:

    பரமக்குடி, நயினார் கோவில், கோவலூர், பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் இரவு, பகலாக மணல் திருட்டுகள் நடந்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் மணல் கடத்தலை தடுக்க அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டனர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 9 போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தீவர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தவிர கனிம வளத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளும் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மணல் கடத்தல் குறித்து “ஹலோ போலீஸ்” என்ற தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வளவு கண்காணிப்புகளையும் மீறி மணல் திருட்டுகள் நடந்து வருகிறது. நேற்று இரவு ராமநாதபுரம் “ஹலோ போலீசுக்கு” வந்த தகவலின் பேரில் பரமக்குடி ஒட்டப்பாலம் பகுதியில் போலீசார் மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர், கிளீனர் இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து பரமக்குடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மணலை கடத்தியவர்கள் யார்? டிப்பர் லாரி உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×