search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
    X

    பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    திண்டுக்கல்:

    மத்திய மாநில அரசுகள் விவசாய கடன்களில் இருந்து நிரந்தர விடுதலை அளிக்க வேண்டும். விவசாய பொருட்களுக்கு நியாயமான கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு நிர்வாகி லெட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். மேலும் சச்சிதானந்தம், தண்டபாணி, காபி விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மருதராஜ், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நிக்கோலஸ், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த யோகலிங்கம், பரமசிவம், சுந்தர்ராஜன், முத்துசாமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் வரும் 20-ந் தேதி டெல்லிக்கு சென்று தஙகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப் போவதாகவும், விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×