search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் ஏரியில் உலா வந்த வெளிநாட்டு ஆமை
    X

    கொடைக்கானல் ஏரியில் உலா வந்த வெளிநாட்டு ஆமை

    கொடைக்கானல் ஏரியில் வெளிநாட்டு ஆமை இருப்பது தெரிய வந்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெல்லி மீன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்து மீன் வளத்துறை சார்பில் ஆய்வு நடைபெற்று வருகிறது. தற்போது கொடைக்கானல் ஏரியில் வெளிநாட்டு ஆமை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    நட்சத்திர ஏரி தண்ணீருக்குள் விழுந்து கிடக்கும் மரம் ஒன்றின் மீது அமர்ந்துள்ள ஸ்லைடர் டர்ட்டில் எனப்படும் ரெட்இயர்டு வகை ஆமை இதுவாகும். இவ்வகை ஆமைகள் 80 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது என்றும், 80 முட்டைகள் இடும் என்றும் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளின் சதுப்பு நில பகுதியில் வாழும் தன்மை கொண்டது என்றும் விலங்கியல் ஆர்வலர் ஜானி தெரிவித்தார்.

    இத குறித்து படகு ஓட்டுனர்கள் தெரிவிக்கையில், ஏரியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக படகு ஓட்டி வருகிறோம். இங்கு மீன்கள் தவிர வேறு எந்த உயிரினங்களும் வாழ முடியாது. ஏனெனில் குளிர் பிரதேசமாக இருப்பதால் மற்ற உயிரினங்கள் ஏரியில் வாழ முடியாது.

    தற்போது ஒரு ஆமை இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் நடந்த சினிமா படப்பிடிப்புன் போது ஆமை பயன்படுத்தப்பட்டது. பின்னர் அந்த ஆமையை படக்குழுவினர் ஏரியில் விட்டு விட்டு சென்று விட்டனர். அந்த ஆமைதான் தற்போது சுற்றி வருகிறது என நினைக்கிறோம் என்றனர்.

    ஏரியில் ஆமை உள்ளது என்ற செய்தி பரவியவுடன் சுற்றுலா பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×