search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் வராததால் காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டம்
    X

    குடிநீர் வராததால் காலி குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டம்

    பெரும்பேடு பகுதியில் தரமான பைப் அமைத்து தரமான குடிநீர் வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மடிமைக்கண்டிகை, வீரங்கிவேடு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது

    பெரும்பேடு பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து பைப் மூலம் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு தண்ணீர் வருவதாகவும் அடிக்கடி பைப் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறுவதால் தங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் கிராம மக்கள் கூறினர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை என்றும் எங்கள் பகுதிக்கு வரும் குடி தண்ணீர் பைப் தரம் இல்லாததால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு அதில் கழிவு நீரும் சேர்ந்து வருவதால் நோய்கள் வருவதாகவும் உடனடியாக தங்கள் கிராமத்திற்கு தரமான பைப் அமைத்து தரமான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் கூறி பாதிக்கப்பட்ட மக்கள் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் சென்று காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊராட்சி ஒன்றிய அலுவலர் வாசுதேவன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×